#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அசத்தலாக ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகர் அரவிந்த்சாமி! எங்கு தெரியுமா? சர்பிரைசில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் தளபதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் அரவிந்த்சாமி. அதனைத் தொடர்ந்து அவர் ரோஜா படத்தில் ஹீரோவாக அவதாரமெடுத்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அரவிந்த்சாமி ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார்.
பின்னர் சில காலங்கள் சினிமாவில் நடிப்பதற்கு இடைவெளி விட்டிருந்த அரவிந்த்சாமி மீண்டும் கடல் படத்தில் நடித்ததன் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அதைத்தொடர்ந்து தனி ஒருவன் படத்தில் மாஸான வில்லனாக நடித்து செம ஹிட் கொடுத்தார். பின்னர் அரவிந்த்சாமி வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ச்சியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தற்போது புதிதாக மலையாள படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ஒட்டு என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழிலும் தயாராக உள்ளது. அரவிந்த்சாமி கடைசியாக 1996-ம் ஆண்டு வெளியான தேவராகம் எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.