மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பை உதறி தள்ளிய நடிகர் அரவிந்த் சாமி! ஏன்? எந்த படத்தில் தெரியுமா?
பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்ற பிரமாண்ட வெற்றி திரைப்படம் லூசிபர். இந்த படம் 175 கோடி வசூல் சாதனையை படைத்தது. இத்தகைய மெகாஹிட் திரைப்படத்தில் மோகன் லால், விவேக் ஓபராய், மஞ்சுவாரியர், பிருத்விராஜ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்யும் உரிமத்தை நடிகர் ராம்சரண் கைப்பற்றியுள்ளார். மேலும் அப்படத்தை அவர், தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்க சாஹோ படத்தை இயக்கிய சுஜித்தும் ஒப்பந்தமாகியுள்ளார்.
லூசிபர் படத்தில் நடிகர் விவேக் ஓபராய் கெத்தான, முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தெலுங்கிலும் அவரையே நடிக்க கேட்டநிலையில், அவர் ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க விருப்பமில்லை என்று விலகியுள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியிடம் பேசியுள்ளதாகவும், கால்ஷீட் பிரச்சினையால் தற்போது வேண்டாமென்று ஒதுங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தற்போது ரகுமானிடம் பேசி உறுதி செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.