#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஸ்மார்ட் வில்லனாக மிரட்டிவரும் நடிகர் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா! அப்பாவை போலவே இவரும் செம கியூட்தான்!!
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான தளபதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் அரவிந்தசாமி. அதனைத் தொடர்ந்து சாக்லேட் பாயாக வலம் வந்த அவர் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் ஹீரோவாக அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் , சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுத்து மீண்டும் கடல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம், போகன், தனிஒருவன் போன்ற படங்களில் வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்களை பெருமளவில் அசத்தியுள்ளார். மேலும் ஸ்மார்ட் வில்லனாகவும் மிரட்டி வருகிறார்.
நடிகர் அரவிந்த்சாமியின் முதல் மனைவி காயத்ரி ராமமூர்த்தி. அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அவர்களுக்கு ஆதிரா மற்றும் ருத்ரா என இருபிள்ளைகள் உள்ளனர். இதைத்தொடர்ந்து அரவிந்த் சாமி 2012ஆம் ஆண்டு அபர்ணா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அரவிந்த்சாமி தனது முதல் மனைவியின் இரு பிள்ளைகளையும் தன்னுடனே வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அரவிந்த்சாமி தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.