திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சாதனையிலும் இப்படி ஒரு வேதனையா! பிகில் பட தயாரிப்பாளர் வெளியிட்ட டுவிட்டர் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது பிகில் திரைப்படம். அட்லியின் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இருவேறு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை குஷி ஆக்கியது. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான இந்த படத்தின் டிரைலர் இணையதளங்களில் வைரலாகி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
இந்த சாதனைகள் அனைத்திற்கும் காரணம் இயக்குனர் அட்லி மற்றும் விஜய் என்பது போன்றுதான் அனைவரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். பொதுவாக எந்த படமாக இருந்தாலும் இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு மட்டுமே இதைப் போன்ற பெருமைகள் கிடைக்கும். ஆனால் இதற்கு பின்னணியில் இருக்கும் தயாரிப்பாளர்களை பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை. இதுகுறித்து பலமுறை ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி பலமுறை தனது பேட்டிகளில் கூறியுள்ளார்.
தற்பொழுது பிகில் படத்தின் டிரைலர் படைத்துள்ள சாதனைகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள அர்ச்சனா கல்பாத்தி, "நான் ஏற்கனவே கூறியது போல் தயாரிப்பாளர்களான நாங்கள் எப்போதுமே பெயர் அற்றவர்கள் மற்றும் முகம் அற்றவர்களாகவே இருப்பது வேதனையாக உள்ளது" என கூறி உள்ளார்.
Thank you for appreciating @Ags_production ‘s Bigil for this fantastic achievement. As I had mentioned in many interviews producers will always be nameless and faceless 😊😊 https://t.co/apAjLKJwbx
— Archana Kalpathi (@archanakalpathi) October 16, 2019