மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேற லெவல்.! நான் முதல்வராக இருந்தால் கண்டிப்பா இதைதான் செய்வேன்!! நம்ம ஆக்ஷன் கிங் கூறியதை பார்த்தீங்களா!!
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக, ஆக்ஷன் கிங்காக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இவர் ஏராளமான நாட்டுப்பற்றுமிக்க படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஜெய்ஹிந்த், முதல்வன் போன்ற படங்கள் இன்றும் மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்களாக உள்ளது.
அதிலும் முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக செம்ம மாஸாக நடித்திருப்பார். அர்ஜுன் தற்போது பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நடிகர் அர்ஜுன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அவர் கூறியதாவது, நான் போலீசாக ஆசைப்பட்டேன். ஆனால் எதிர்பாராதவிதமாக சினிமாவில் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டேன். என் மகள்கள் எனது பழைய படத்தை பார்த்து கிண்டல் செய்வார்கள். தெலுங்கில் நான் ஸ்ரீ ஆஞ்சநேயம் படத்தில் ஆஞ்சநேயராக நடித்தேன். அதன் பிறகு என்னை ரசிகர்கள் கையெடுத்து கும்பிட்டார்கள்.
அதேபோன்று முதல்வன் படத்தை பார்த்த பின் நிறைய பேர் என்னை அரசியலில் ஈடுபடுங்கள் என கூறினார்கள். முதலில் அந்த படத்தில் நடிக்க நான் மிகவும் யோசித்தேன். ஆனால் முதல்வன் படம் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. எனக்கு ஒரு நாள் முதல்வராக வாய்ப்பு கிடைத்தால் நான் கல்வி மற்றும் மருத்துவத்தை அனைத்து மக்களுக்கும் இலவசமாக்குவேன் என கூறியுள்ளார்.