ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
மீண்டும் வெளியாகும் அர்ஜுன் ரெட்டி! இந்த முறை கொஞ்சம் ஸ்பெஷலா!! வெளியான தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இத்திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியுள்ளார். காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகவே அவர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரத் துவங்கினார்.
மேலும் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் தமிழில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் உருவானது.
இந்நிலையில் சமீபத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. அப்போது பேட்டியளித்த இயக்குனர் சந்தீப் ரெட்டி, படம் வெளியாகி ஐந்தாவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் 2020 ல் இப்படம் மீண்டும் ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும் அப்பொழுது படத்தில் நீக்கப்பட்ட சில காட்சிகளும் இடம் பெற்றிருக்கும் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.