திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்துள்ள அர்ஜுன் மகள்... வைரலாகும் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன். இவர் தேசப்பற்று மிக்க, சமூக கருத்துகளை கொண்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்த இவர் ஆக்சன் கிங் என ரசிகர்களால் பெருமையோடு அழைக்கப்படுகிறார்.
அதுமட்டுமின்றி இவருக்கு தமிழ் சினிமாவின் புருஸ்லி என்ற பெயரும் இருக்கிறது. இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜுன் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வில்லன் கதாபாத்திரம் கொண்ட திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
அர்ஜுன் கடந்த 1988 ஆம் ஆண்டு கன்னட நடிகையான நிவேதிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜஸ்வர்யா தமிழில் விஷாலுடன் இணைந்து பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இரண்டாவது மகள் அஞ்சனா பெண்களுக்கு தேவையான ஹேண்ட்பேக் தயாரிக்கும் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார். தற்போது அஞ்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர் ஹீரோயின்ஸ்க்கே டஃப் கொடுப்பார் போல என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.