மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஆரம்பமான பெரும் ஆர்மி.! அட.. எந்த போட்டியாளருக்கு பார்த்தீங்களா!!
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் சீசன் 6 நேற்று மிகவும் பிரமாண்டமாக துவங்கியது.
இந்த சீசனில் ஜிபி முத்து, அசீம், அசல், ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ஷெரினா, ஏடிகே, ஆயிஷா, மணிகண்டன், ரக்ஷிதா, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், நடன இயக்குனர் சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவா, தனலட்சுமி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்குவது முதல் சீசனில் இருந்தே இருந்து வருகிறது. ஓவியா, லாஸ்லியா என பல போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் ஆர்மி தொடங்கியுள்ளனர்.
ஆனால் இந்த சீசனில் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பே ஒரு போட்டியாளருக்கு பெரும் ஆர்மி உருவாகியுள்ளது. அதாவது கதாநாயகியாக வேண்டும் என்ற கனவுகளோடு பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ள இலங்கையைச் சேர்ந்த ஜனனிக்கு ஆர்மி உருவாகியுள்ளது. ஆனால் ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த அளவிற்கு சிறப்பாக விளையாடுவார்? ரசிகர்களை திருப்திபடுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.