மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விஜயகுமாருக்கு பிறந்தநாள்! குடும்பத்தினருடன் எங்கு சென்றுள்ளார் பார்த்தீங்களா!! அருண் விஜய் பகிர்ந்த புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி, மூத்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜயகுமார். அவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல ரோல்களிலும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜயகுமார் சினிமா மட்டுமின்றி பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவரது குடும்பம் ஒரு கலைக்குடும்பம். விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தற்போது பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும் மகள்கள் வனிதா, பிரீத்தா, ஸ்ரீ தேவி ஆகியோரும் படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நேற்று விஜயகுமார் தனது 79 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
பிறந்தநாளையொட்டி அவர் தனது மனைவி முத்துக்கண்ணு, மகன் அருண் விஜய், அவரது மனைவி, மகள்கள் ஸ்ரீதேவி, ப்ரீத்தா, மருமகன் இயக்குனர் ஹரி மற்றும் பேரன், பேத்திகள் என குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அத்தகைய புகைப்படங்களை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.