மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமாவில் களமிறங்கும் நடிகர் அருண் விஜய்யின் வாரிசு! அதுவும் எந்த டாப் ஹீரோவின் படத்தில் பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த திறமையான நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் அவர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டானது. அருண் விஜய் முன்னணி நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகனாவார். அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பூர்வி என்ற மகளும் அர்னவ் என்ற மகனும் உள்ளனர்.
With all your blessings, extremely happy to announce that my son Arnav Vijay is making his debut today! Proud that he will be launched by Actor @Suriya_offl's @2D_ENTPVTLTD. Feels good to continue the camaraderie generation after generation. Couldn't have asked for more.🙏 #AVJ pic.twitter.com/fxLt77uS6Y
— ArunVijay (@arunvijayno1) December 14, 2020
இந்த நிலையில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் சினிமாவில் களமிறங்கவுள்ளார். அவரை நடிகர் சூர்யா அறிமுகம் செய்ய உள்ளாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாம். அடுத்தடுத்த தலைமுறை சினிமாவில் நுழைவது சந்தோஷமாக உள்ளதாக அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.