மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிப் லாக் சீனில் நடிகையின் உதட்டை கடித்த பிரபல நடிகர்! பின் அளித்த விளக்கம்! என்ன தெரியுமா?
தமிழில் தடையற தாக்க, மீகாமன் படங்களை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தடம். செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து அருண் விஜய் இப்படத்தில் கதாநாயனாக நடிக்கிறார்.மேலும் இதில் அவர் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 22- ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது அருண் விஜய் பேசும்போது ’எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறல் எடுக்கும். இந்த படத்தில் டைரக்டர் என்னை லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க சொன்னார். நான் முடியாது என மறுத்துவிட்டேன். உடனே எனது மனைவியிடம் சம்மதம் வாங்கி நடிக்க வைத்ததாக கூறினார்.
இதன் குறுக்கே பேசிய இயக்குனர் மகிழ் திருமேனி, “பிடிக்காமல் நடித்து தான் 13 டேக்குகள் முத்தக்காட்சிக்கு வாங்குனீர்களா? என கேட்டார்.
அதற்கு அருண்விஜய் நான் வெறும் முத்தம் மட்டும் தான் கொடுத்தேன்.
கேமரா மேன் ஷூட் செய்த விதம் நான் கடித்து இழுப்பது போல் இருந்துள்ளது. சென்சார் அதிகாரிகளிடம் இதை எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. காட்சியை நீக்கியே ஆக வேண்டும் என கூறி விட்டார்கள் என கூறினார்.