#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படபிடிப்பு தளத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஏற்பட்ட சோகம் - வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் திகழ்பவர் நடிகர் அருண் விஜய். மேலும் இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். ஒரு சில பிரபலங்களின் மகன்கள் வந்த வேகத்தில் சென்று விடுவார்கள். ஆனால் அருண் விஜய் தனது வித்தியாசமான நடிப்பால் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரின் வித்தியாசமான நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து குற்றம் 23,தடம் போன்ற படங்கள் தொடர் வெற்றி தான்.
இந்நிலையில் தற்போது அருண் விஜய் வாகா பட இயக்குனர் குமார வேலன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்த பாலக் லாவாணி நடிக்கிறார்.
இப்படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 'வேலையில் இருக்கும் போது காயம் பட்டால் எனக்கு வலி தெரியாது. இது நான் நேசித்து ஏற்றுக் கொண்ட பயணம். அத்தனை தழும்புகளும் ஒரு கதை சொல்லும்' என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அருண் விஜய் காயத்திற்கு ஸ்டண்ட் சில்வா மருந்து போடுவது போல் உள்ளது.
I have never felt pain when I'm hurt at work, for this is the journey I love and chose to rise and stay in.. every scar tells a story.
— ArunVijay (@arunvijayno1) September 25, 2019
Shooting for #AV30 🎥.. back with my dearest @silvastunt 💪 #FightNights pic.twitter.com/tZbg95LJ0N