#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அப்பாடா.. இவரா.! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் தெரியுமா?? தீயாய் பரவும் தகவல்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. 21 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ஜி.பி முத்து தானாகவே வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சாந்தி மாஸ்டர் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார்.
கடந்த வாரம் முழுவதும் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டு விறுவிறுப்பாகவும் சண்டை, சச்சரவு என பரபரப்பாகவும் சென்றது. வாய்ப்பேச்சு தாண்டி கைகலப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல் தொடர்ந்து கேள்விகளை கேட்டு போட்டியாளர்களை வெளுத்து வாங்கினார்.
இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அசல் கோலார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அசல் டாஸ்க்குகளை சிறப்பாக செய்து சவாலான போட்டியாளராக திகழ்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில், அவர் பெண்களிடம் சில்மிஷம் செய்த பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது இந்த வாரம் அசல் கோலார் எலிமினேட்டாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.