பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அந்த நடிகருக்கு 4வது மனைவியாக வர நான் ரெடி! ரசிகர்களை அதிர வைத்த பிக்பாஸ் பிரபலம்!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து மெகா ஸ்டாராக இருக்க கூடியவர் நடிகர் பவன் கல்யாண். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் பவன் கல்யாண் கடந்த 1997ம் ஆண்டு நந்தினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2007-ல் விவாகரத்து பெற்றனர். பின்னர் பவன் கல்யாண் 2009ஆம் ஆண்டு ரேணு தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இருவரும் 2012ல் விவாகரத்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து அவர் 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நடிகையான அன்னா லெஸ்னேவா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமான நடிகை அஷு ரெட்டி நடிகர் பவன் கல்யாணியின் தீவிர ரசிகை ஆவார். இவர் அண்மையில் அவரை சந்தித்த புகைப்படத்தையும், தன்னை வாழ்த்தி எழுதிய வாசகத்தின் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் எனது முதல் காதல் நீங்கள்தான் பவன் கல்யாண் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைக்கண்ட நெட்டிசன்கள் பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டு, நான்காவது மனைவியாக தயாரா என கேட்ட நிலையில், அதற்கு அவர் உடனே நான் ரெடி என்பது போல் பதிலளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.