மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய பயணம் தொடங்குகிறது.! செம ஹேப்பியில் அட்லீ- பிரியா ஜோடி.! குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழ் சினிமாவில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தொடர்ந்து அட்லீ விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
அட்லீ கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரும் நடிகை ஆவார். பிரியா சின்னத்திரை தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் அண்மையில் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அட்லீ அறிவித்தார். மேலும் அவர்களது வளைகாப்பு புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
தற்போது அட்லீயின் மனைவி பிரியாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இயக்குனர் அட்லீ மிகவும் மகிழ்ச்சியாக தனது சமூக வலைதளப் பக்கத்தில், சரியாகத்தான் சொல்லியுள்ளார்கள்.. இதைவிட சிறந்த உணர்வு வேறு எதுவும் இல்லை. எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளான். பெற்றோர்களாக எங்களது புதிய சாகச பயணம் இன்றுடன் தொடங்குகிறது என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.