மனைவியின் காலடியில் இயக்குனர் அட்லீ! படுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்த பிரியா!



atlee-wife-shares-bedroom-photos

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றி பின் ராஜாராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. அதனை தொடர்ந்து அட்லீ தளபதி விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து படங்களை இயக்கியிருந்தார். அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்தநிலையில் அட்லீ அடுத்ததாக பாலிவுட்டின் முன்னணி நடிகரான  ஷாருக்கான் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். லயன் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட  பலரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் புனே நகரில் தொடங்கியது. அட்லீயின் மனைவி பிரியா. இவரும் ஏராளமான திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் பிரியா அட்லி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் படுக்கையறையில் கணவருடன் படுத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.