மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஆட்டோகிராப் நடிகை கோபிகா! தற்போதைய புகைப்படம்.
இயக்குனர் சேரன் இயக்கத்தில், நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்டம் ஆட்டோகிராப். இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக, மலையாள பெண்ணாக நடித்தவர் நடிகை கோபிகா. ஆட்டோகிராப் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார் கோபிகா.
மேலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்தது. கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடித்துள்ளார். ஏறத்தாழ 30 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார் கோபிகா.
அதன்பின்னர் பிரபல மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அயர்லாந்தில் செட்டிலாகிவிட்டார் கோபிகா. திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே தலைகாட்டாத கோபிகா சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைக்ளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், ஆட்டோகிராப் கோபிகாவா இது என கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அவரது புகைப்படங்கள்.