ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
50அடி உயர மரத்தில் சட்டென ஏறிய பிரபல வில்லன் நடிகர்! ஆச்சரியத்தில் மூழ்கிய குடும்பத்தினர்! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!

தமிழ் சினிமாவில் பூவிழி வாசலிலே, அஞ்சலி, சூரியன், அட்டகாசம், லாடம், விண்ணைத்தாண்டி வருவாயா, ரெளத்திரம், முனி காஞ்சனா 2, காக்கா முட்டை மற்றும் அடங்க மறு உள்ளிட்ட படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பாபு ஆண்டனி. மேலும் இவர் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.
இந்நிலையில் தற்போது கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாபு ஆண்டனி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அப்பொழுது சமீபத்தில் ஆண்டனியின் மகன்கள் ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்துகொண்டு இருந்துள்ளனர். அப்பொழுது ட்ரோன் கேமரா 50 அடி உயரத்தில் உள்ள மரத்தில் சிக்கிக்கொண்டது.
இந்நிலையில் பாபு ஆண்டனி சற்றும் யோசிக்காமல் 50 அடி உயரமான மரத்தில் ஏறி அதன் உச்சிக்கு சென்று ட்ரோனை எடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் மரத்தில் ஏறுகிறேன். நான் சிறுவயதில் மரத்தில் ஏறி விளையாடியது குறித்து சொன்னால் எனது மனைவி மற்றும் மகன்கள் நம்பவில்லை. தற்போது நேரில் கண்டு ஆச்சரியப்பட்டு விட்டனர் என கூறியுள்ளார்.