பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பத்திரிக்கையாளர்களை மதிக்கல., இப்போ மட்டும் எங்க தயவு வேணுமா? - நடிகை ஹன்சிகாவை விளாசிய பயில்வான்..!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக முதல்முறையாக தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். தற்போது தெலுங்கு, கன்னடம் உட்பட பலமொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடிக்கிறார். ஹன்சிகாவை பலரும் அடுத்த குஷ்பூ என்றும் அழைத்து வந்தனர்.
மேலும் இவர் பிரபல தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது மீண்டும் தமிழ் திரையுலகத்தில் அடி எடுத்து வைத்துள்ளார். பாட்னர் திரைப்படத்தில் அவர் நடித்திருந்த நிலையில், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அப்போது பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஹன்சிகாவிடம், "வாய்ப்புகள் குறைந்ததனால் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து திருமணத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளீர்கள். திருமணத்திற்கு எந்த ஒரு தமிழ் பத்திரிகையாளரையும் அழைக்கவில்லை.
யாரையும் மதிக்கவில்லை. இப்போது எங்களின் தயவு உங்களுக்கு தேவையா?" என்று கேட்டுள்ளார். இதுகுறித்து பயில்வான் கூறுகையில், "நான் இந்த கேள்வியை முதல்முறையாக ஹன்சிகாவிடம் கேட்கவில்லை. முன்னதாக ரேவதியிடம் நான் இந்த கேள்வியை கேட்டேன். ஆனால் அவர் பதிலளிக்காமல் எழுந்து சென்றார். ஹன்சிகாவிற்கு தமிழ் மொழி தெரியாத காரணத்தால் அவர் அங்கு விழி பிதுங்கி நின்றார்" என்று கூறினார்.