பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"சிவகார்த்திகேயன் என்ன பாலியல் அத்துமீறலா பண்ணாரு" இமான் சர்ச்சையில் பயில்வான் ரங்கநாதன் கருத்து.!
கடந்த 2001ம் ஆண்டு "தமிழன்" திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான். இவர் பின்னணிப் பாடகராகவும் உள்ளார். இமான் அவரது முதல் மனைவி மோனிகாவை இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டார்.
இந்நிலையில், இமான் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயனை கடுமையாக சாடியிருந்தார். குழந்தைகளின் நலன் கருதி தன்னால் சில விஷயங்களை கூற முடியவில்லை என்று கூறியிருந்தார். இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், " இமானும், அவரது முதல் மனைவியும் 12 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர்.
மேலும் விவாகரத்தாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது இதைப்பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன? இப்போது இமானுக்கு மார்க்கெட் இல்லை என்பதால் இப்படி கூறினாரா என்று தெரியவில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் அமைதியாக இருந்தால் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம் ஆகிவிடும்.
இது கண்டிப்பாக சிவகார்த்திகேயன் குடும்பத்திலும் பிரச்னையை ஏற்படுத்தும். இதனால் அவரது இமேஜ் பாதிக்கப்பட்டு சினிமா கேரியரும் பாதிக்கப்படும். சிவகார்த்திகேயனுக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். மேலும் சிவகார்த்திகேயன் என்ன இமானின் மனைவியிடம் பாலியல் அத்து மீறலா பன்னாரு எனவே இவர் மீது மட்டும் குற்றம் சொல்ல முடியாது" என்று பயில்வான் கூறினார்.