#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"நடிகர் போண்டா மணி மறைவுக்கு காரணம் என்ன?" உண்மையை போட்டுடைத்த பயில்வான் ரங்கநாதன்!
மூன்று தலைமுறைகளாக முக்கிய நகைச்சுவை மற்றும் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்தவர் போண்டா மணி. இவர் 270க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இலங்கையிலிருந்து அகதியாக தமிழகம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"பவுனு பவுனு தான்" படத்தில் தான் இவர் முதலில் அறிமுகமானார். ஓய்வே இல்லாமல் படப்பிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சி என்று எப்போதும் பிசியாக இருந்த போண்டா மணி, ரஜினி, கமல், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத போண்டா மணிக்கு இரண்டு கிட்னிக்களும் செயலிழந்த நிலையில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தார். தொடர்ந்து டயாலிசிஸ் செய்துவரும் போண்டா மணி, நேற்று இரவு வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதுகுறித்து அவரது மகன் என்னிடம்"அப்பா இன்று டயாலிசிஸ் செய்ய காசு இல்லை. நாளைக்கு போகலாம் என்று சொன்னதாக கூறினார். பல சமயங்களில் கடவுள் அவரை காப்பாற்றியுள்ளார், ஆனால் இன்று அவரின் விதி முடிந்துவிட்டது" என்று பயில்வான் ரங்கசாமி கண்ணீர் மல்க கூறினார்.