பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
த்ரிஷாவிற்கு இப்படியொரு பழக்கமா.? பிரபல பத்திரிகையாளரின் பேச்சால் இணையத்தில் சர்ச்சை.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் ஆரம்ப காலகட்டத்தில் விளம்பரங்களிலும், சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். பின்பு தனது நடிப்பு திறமையின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.
பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா ரசிகர்களின் மனதை கவர்ந்து முன்னணி நடிகையாக தமிழ் திரை துறையில் வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து இவருக்கு பாராட்டை பெற்று தந்தது.
தற்போது விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் த்ரிஷாவை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். இப்ப பேச்சு இணையத்தில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
அவர் கூறியதாவது, "த்ரிஷாவிற்கு அப்போது இருந்தே குடிப்பழக்கம் இருக்கிறது. இதனால் தான் த்ரிஷா உடல் எடை அதிகரிக்கவில்லை" என்று கூறியிருக்கிறார். உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கும், குடிப்பழக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நெட்டிசன்கள் பயில்வான் ரங்க நாதனை கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.