"மகளின் இறப்பிற்கு கேமராக்கள் வரக்கூடாது என்று விஜய் ஆண்டனி ஏன் சொல்லவில்லை" சர்ச்சையை கிளப்பிய பயில்வான்..



bayilwan-controversy-talk-about-vijay-antony

1983ம் ஆண்டு "முந்தானை முடிச்சு" படத்தில் வைத்தியராக நடித்து அறிமுகமானவர் பயில்வான் ரங்கநாதன். தொடர்ந்து பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி கேரக்டரிலும் நடித்துள்ள இவர், தற்போது சினிமா விமர்சகராக உள்ளார்.

bayilvan

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பயில்வான் ரங்கநாதன், "என்னிடம் எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது. உண்மையில் இங்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கம், நடக்காத தயாரிப்பாளர் சங்கம் என்று இரண்டு சங்கங்கள் உள்ளன.

இதில் இரண்டாவது சங்கம் சொல்லும் எதுவும் 4 நாட்கள் கூட செல்லுபடியாகாது. பிரபலங்களின் மரணத்தை கேமராக்கள் படம் பிடிக்க கூடாது என்று ஏன் கூறுகிறீர்கள்? எங்களுடைய படத்தை பிரமோட் பண்ணுங்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள், இப்போது கேமராக்களை தடை செய்ய என்ன தகுதி இருக்கிறது?

bayilvan

தனது தந்தையின் மறைவின் போது கேமராக்கள் வரக்கூடாது என்று அஜித் கூறினார். மேலும் யாரும் வரவில்லை. ஆனால் இப்போது விஜய் ஆண்டனி ஏன் அப்படி சொல்லவில்லை? அதற்கு பதில் நீங்கள் ஏன் இப்படி சொல்கிறீர்கள்?" என்று திரைத்துறையினர் கூடியிருந்த மேடையிலேயே விளாசியுள்ளார், பயில்வான் ரங்கநாதன்.