திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"இப்படியெல்லாமா பண்ணுவீங்க" வருத்தப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் "பாக்கியலட்சுமி" என்ற தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த தொடரில் முக்கிய கதாபாத்திரமான "கோபி"என்கிற சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
சதீஷ் அவர்கள் பல வருடங்களாக சின்ன திரையில் நடித்து வருகிறார். ஆனால் பாக்கியலட்சுமி தொடரின் மூலமே அவர் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். அந்தத் தொடரில் பாக்கியலட்சுமி கணவராக வரும் சதீஷ் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல ரசிகர்களை எப்படி சம்பாதித்துள்ளாரோ அதேபோல் அவரை வெறுப்பவர்களும் உண்டு.
அவ்வப்போது தனது சமூக வலைத்தள கணக்கில் நடிப்பின் அனுபவத்தை பற்றியும் தனது வேலையை குறித்தும் பல பதிவுகளை சதீஷ் பகிர்வதுண்டு. அப்படி சமீபத்தில் அவர் பதிவிட்ட செய்தியில் நெகட்டிவ் ரோல் ஏற்று நடிப்பதினாலே பலரும் "தன்னை திட்டுகின்றனர் எனது இயல்பான கொடுமை இதுதான் என்று நினைக்கின்றனர்" என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.
இது தனக்கு மட்டும் அல்லாமல் "தன் சாதிக்காரர்களான தன்னைப்போல் இருக்கும் சின்னத்திரை நடிகர்கள்" பலருக்கும் நிகழ்வதுண்டு என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.