மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொன்னியின் செல்வன் ; அந்த கேரக்டர்ல நீதான் நடிச்சுருக்கணும்.! இயக்குனர் பாரதிராஜா யாரை கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். பல போராட்டங்களுக்கு பிறகு உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன்,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இத்திரைபடம் குறித்து பிரபல நடிகரிடம் பாரதிராஜா பேசியதாக தகவல்கள் பரவி வருகிறது. இயக்குனர் பாரதிராஜா உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்மையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அவரை நலம் விசாரிக்க பிரபல நடிகர் நெப்போலியன் நேரில் சென்று சந்தித்துள்ளாராம்.
அப்பொழுது பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசிய அவர், பொன்னியின் செல்வன் படத்தில் நீ பெரிய பழுவேட்டையராக நடித்திருக்க வேண்டும். உனது உயரத்துக்கும், உடல்வாகிற்கும் அந்த வேடம் உனக்கு பொருத்தமாக இருக்கும் என கூறியதாக தகவல்கள் பரவி வருகிறது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்துள்ளார்.