ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சிம்புவின் மாநாடு படத்திலிருந்து விலகிவிட்டாரா இந்த முக்கிய பிரபலம்! எதனால் பார்த்தீர்களா! ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இதன் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அரசியலை மையமாகக் கொண்ட இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த பாரதிராஜா திடீரென விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் மாநாடு படத்துக்கு உரிய தேதிகள் ஒதுக்கப்பட முடியாத நிலையில் அவர் அப்படத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை