பாலு வந்துருடா.! கதறி அழுத இயக்குனர் பாரதிராஜா! வைரலாகும் கண்கலங்க வைக்கும் உருக்கமான வீடியோ!



Bharathiraja talk about spb video viral

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்போது எஸ்பிபியின் உடல்நிலை சற்று பின்னடைவை அடைவதாக அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் திரை பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் பாரதிராஜா அவர்கள், எஸ்பிபி நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இது ஒரு பொன்மாலைப் பொழுது. உலகமே கேட்டு வியந்துபோகும் பாடல்.

பொன் மாலை பொழுது நீ பாடலாம்.. ஆனா உனக்கு பொன்மாலை பொழுது வரக்கூடாது.. பொன் காலை பொழுதுதான் வரவேண்டும். பாலு நீ சீக்கிரம் வந்துவிடுவாய். நான் வணங்கும் பஞ்ச பூதங்கள் உண்மை என்றால் நீ மறுபடியும் வருவாய்.  இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடுவாய் என குரல் தழுதழுக்க  உருக்கமாக கூறியுள்ளார்