மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் பெண் என்று கூறிவிட்டு தாலியை கழற்றியது ஏன் - முதன்முறையாக விளக்கமளித்த நடிகை மதுமிதா.
பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 6 பேர் மட்டுமே விளையாடி வருகின்றன.
இந்நிலையில் தற்கொலை முயற்சி செய்ததாக மதுமிதாவை வீட்டைவிட்டு வெளியேற்றினார் பிக்பாஸ். அதன் பிறகு வெகு நாட்கள் சென்று தனது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கூறினார் மதுமிதா.
இந்நிலையில் தற்போது தமிழ் பெண் என்று கூறிவிட்டு தாலியை ஏன் கழற்றினிர்கள் என்ற கேள்விக்கு தற்போது விளக்கமளித்துள்ளார். அதாவது பிக்பாஸ் செல்வதற்கு முன்பு அவற்றையும் சோதனை செய்தார்கள். அப்பொழுது தாலி போன்ற பெரிய நகைகளை அணியும்போது அவை மைக்கில் உரசும் என்பதால் அதனை கழற்ற சொன்னார்கள்.
அதற்கு நான் எப்படி தாலியை கழற்ற முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நீங்கள் டாஸ்க் விளையாடும்போது யாராவது உங்கள் தாலியை இழுத்துவிட்டாள் என்ன செய்வீர்கள் என்று கேட்டனர். அதன் பிறகு என் கணவரிடம் இதைப்பற்றி கூறினேன். பிறகு என் கணவர் ஒப்புக்கொண்டதால் தான் எனது தாலியை கழற்றியதாக கூறியுள்ளார்.