மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுமிதாவை நேரில் சென்று நலம் விசாரித்த பிரபலம்! மகிழ்ச்சியில் மதுமிதா, உற்சாகத்தில் ரசிகர்கள்!
வெள்ளித்திரையில் காமெடியின் மக்கள் மனங்களை வென்று பிரபலமானவர் ஜாங்கிரி என்னும் மதுமிதா. இவர் பல வெற்றி படங்களில் காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராக நடித்துள்ளார். அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டார். கலந்து மக்களின் அதிகபட்ச ஆதரவை பெற்றார். வெற்றிகரமாக 50 நாட்களை கடந்த மதுமிதா திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியனார்.
மேலும் அவர் வீட்டில் இருக்கும் போது அவருக்கு ஆதரவாக நின்றவர்கள் சேரன் மற்றும் கஸ்தூரி மட்டுமே என இறுதியாக கூறி வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தற்போது சேரன் மதுமிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று மதுமிதாவிடம் நலம் விசாரித்துள்ளார். மேலும் அவர் வீட்டில் உணவு அருந்தி விட்டு அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சேரன் அவர்கள் பதிவிட்டுள்ளார். அதில் பழைய நிலைக்கு மாறிய மதுமிதாவை பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் மனதில் பட்ட கருத்துக்களை துணிவுடனும் நேர்மையுடனும் பகிர்ந்ததில் மதுமிதாவும் ஒருவர்.. நலம் விசாரிக்க இன்று அவர் இல்லம் சென்று சந்தித்தேன்.. உணவருந்தினேன்..
— Cheran (@directorcheran) October 23, 2019
உபசரிப்பும் பேசிய தருணங்களும் மனதுக்கு மகிழ்வை தந்தது. மதுமிதாவின் வாழ்வு சிறக்கட்டும்.. pic.twitter.com/XqZdpzEWER
நாமும் நம்மை சார்ந்தவர்களும் எப்போதும் சந்தோசமாக இருக்கும்படியான சூழலை உருவாக்கிக்கொள்வது நம்கையில்தான்... உங்கள் இருவரின் வாழ்க்கை அழ்கானது.. எப்போதும் சந்தோசப்பூக்கள் பூக்கட்டும்.. https://t.co/BzYw44dKO4
— Cheran (@directorcheran) October 23, 2019