#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற பிக்பாஸ் பிரபலம்- யார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் ஓன்று மற்றும் இரண்டை தொடர்ந்து சீசன் மூன்றையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் போட்டி தொடங்கியதில் இருந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அவர்களுடன் ஈழத்தமிழர்களான முகென் ராவ், லொஸ்லியா, தர்ஷன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சி ஆரம்பித்ததுமே மீம்ஸ் வெளியாக தொடங்கிவிட்டது. ஆர்மிக்கள் தொடங்கப்பட்டு ரசிகர்கள் கூடிவிட்டனர்.
இதில் தற்போது இலங்கையில் இருந்து வந்திருக்கும் செய்தி வாசிப்பாளர் லொஸ்லியாவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்களை உறுப்பினர்களாக கொண்ட டிவிட்டர் பக்கத்தினர் பதிவிட்டு வருகின்றனர். கடைசி வரை இந்த ஆதரவு இருக்குமா, அவர்கள் தங்கள் பலத்தை நிரூபிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.