பிக்பாஸ் பிரபலம் ஆரவ்விற்கு குழந்தை பிறந்தது..என்ன குழந்தை தெரியுமா?



Bigboss aarav blessed with baby boy

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியின் புதிய முயற்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. அந்நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி சீசன் 1 பட்டத்தை தட்டிச் சென்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆரவ். 

அதற்கு முன்னதாக "ஓ காதல் கண்மணி" மற்றும் "சைத்தான்" ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் மூலம் பிரபலமானதை அடுத்து மார்க்கெட் ராஜா,ராஜபீமா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். 

aarav

நடிகர் ஆரவ், நடிகை ராஹே என்பவரை காதலித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் இத்தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.