மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னை மன்னிச்சிடுங்க அண்ணா.. டாஸ்க்கால் பிக்பாஸ் போட்டியாளருடன் ஏற்பட்ட சண்டை.! மன்னிப்பு கேட்டு இணைந்த ஜனனி.!
தற்போது விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6ல் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தரப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களாக தனலட்சுமி மற்றும் ஷிவின் கணேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து வருகிறார். இதனால் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு விவாதங்களும் ஏற்பட்டு வருகிறது. நன்றாக பழகியவர்களும் விலகிச் செல்வது நடைபெறுகிறது
பிக்பாஸ் வீட்டில் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வருபவர்கள் ஏடிகே மற்றும் ஜனனி. இலங்கையைச் சேர்ந்த இருவரும் நன்கு பாசமாக பழகி வந்தனர். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் முகமூடி அணிந்து கொண்டு நல்லவர் போல் நடிப்பவர் யார் என்ற கேள்வியை எழுப்ப அதற்கு ஜனனி ஏடிகே என பதில் அளித்துள்ளார். அதனை சிறிதும் எதிர்பார்க்காத ஏடிகே வருத்தத்துடன் ஜனனியிடம் சண்டை போட்டு சென்றுள்ளார். தொடர்ந்து இருவரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டுள்ளனர். ஜனனியும் ஏடிகேவிடம் மன்னிச்சிடுங்க அண்ணா என கேட்டு இருவரும் மீண்டும் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.