சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
மதுபோதையில் அரசு பஸ் ஓட்டுனர்கள்.! போக்குவரத்துக்கழகத்திற்கு அதிரடி உத்திரவு.!

அரசு பேருந்துகளில் பலரும் மது குடித்துவிட்டு பயணம் செய்வார்கள். இவர்களால் சக பயணிகளுக்கு பெரும் அளவில் தொந்தரவு இருக்கும். ஆனால், சமீப காலமாக ஒரு படி மேலே சென்று ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இது பொதுமக்களின் உயிருக்கே உலை வைக்கும் விதமாக அமைந்துள்ளது. எனவே, தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. மாநிலம் முழுதும் இருக்கக்கூடிய அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தற்போது அரசு சார்பில் ஆல்கஹால் அளவை மதிப்பிடக்கூடிய கருவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த கருவியை பயன்படுத்தி அன்றாடம் வேலைக்கு வருகின்ற நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போதையில் இருக்கின்றனரா.? என்பதை பரிசோதித்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: அச்சச்சோ.. பஸ்ஸ நிறுத்துங்க.. மூச்சிரைக்க பரிதாபமாக ஓடிய சிறுமி.. பதற வைக்கும் வீடியோ.!
ஒருவேளை அவர்கள் போதையில் இருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: 44 பயணிகள் உயிர் தப்பியது.. ஓட்டுனருக்கு திடீர் தலைசுற்றல்.. மசினகுடி மலையில் பீதியான பயணிகள்.!