#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவுடன் லீலை,மஹத்திற்கு வீடியோ வெளியிட்ட காதலி, ஷாக் ஆன ரசிகர்கள்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாக இருப்பவர் நடிகர் மகத்.
அங்கு அவர் பல லீலைகளை செய்து வரும் நிலையில் அவரது காதலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மகத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் போதே தனக்கு காதலி இருக்கிறாள் என கூறிவிட்டு சென்றார். பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் யாஷிகாவுடன் மிக நெருக்கமாக பழகி கிசுகிசுவிற்கு ஆளானார்.மேலும் கமல் இதுகுறித்து கேட்கையில் யாஷிகா எனது நல்ல தோழி என்று மகத் கூறினார்.
இந்நிலையில் மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா தனது காதலனுக்காக ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .
மஹத்துக்கும் யாசிகாவிற்கும் நெருக்கமான உறவு இருந்தபோதிலும் அவர் மீது எவ்வித கோபமும் இல்லாமல் மஹத்தின் காதலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவலையுடன் பதிவிட்டுள்ளார்.
அதில் 60 நாட்கள் ஆகிவிட்டது. நீ தனியாக என்னை தவிக்க விட்டுவிட்டு சென்றதற்கு திரும்ப வந்து என்னிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். நீ இல்லாமல் நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் மஹத் மீது இன்னும் நம்பிக்கை உள்ளதா என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்