மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இவங்களெல்லாமா!! பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?? தீயாய் பரவும் தகவல்!!
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக பல மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. அதாவது டி, இமான் முன்னாள் மனைவி மோனிகா, தொகுப்பாளர் ரக்ஷன், பாடகி ராஜலட்சுமி, நடிகர் கார்த்திக் குமார், சீரியல் நடிகை ஸ்ரீநிதி,GP முத்து, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சீரியல் புகழ் ஆயிஷா, தொகுப்பாளினி டிடி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த முறை சாமானிய மக்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.