மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்ராசக்க.. பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போ தொடங்குது தெரியுமா? செம மாஸாக வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் பெருமளவில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது.
இதன் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ் மற்றும் நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் இதன் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக பல ப்ரோமோக்கள் வெளியானது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும், அதில் யாரெல்லாம் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது தொடங்குகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3 மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.