#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கன்பெஷன் ரூமிற்குள் சென்று கண்ணீர் விட்டு கதறி அழுத அனிதா சம்பத்! ஏன் தெரியுமா? வைரலாகும் வீடியோவால் வருத்தத்தில் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. மேலும் நாளுக்கு நாள் மோதல்கள், வாக்குவாதங்கள், உற்சாகங்கள் என எதற்குமே குறைவில்லாமல் சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே சுரேஷ் அவர்களிடம் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் சிறு விஷயங்களுக்கும் சட்டென கோபப்படுதல் என இருந்து வந்தார். மேலும் அவ்வப்போது தானாக சென்று அனைவரிடமும் பேசி சமாதானம் செய்து கலகலப்பாக இருக்கவும் முயற்சித்து வந்தார்.
#Day23 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/6Q0nvgRFOX
— Vijay Television (@vijaytelevision) October 27, 2020
இந்நிலையில் இன்றைய நாளிற்கான முதல் ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் கன்பெக்ஷன் அறைக்குள் சென்ற அனிதா தான் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கக் கூடியவள், ஆனால் இங்கு தனியாளாக இருப்பது போல் உணர்கிறேன். ஏதேனும் பிரச்சினை வந்தால்கூட யாரும் என் பக்கம் நிற்காததுபோல கவலையாக உள்ளது. என் மீதுதான் தவறுகள் உள்ளதா என குழப்பமாக இருக்கிறது என்று கூறி கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.