பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
ஒவ்வொருத்தரும் வேற லெவல் ஆச்சே.. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள போட்டியாளர்கள் இவர்கள்தான்!! அனல் பறக்கப்போகுது!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கினார். இதன் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன், நான்காவது சீசனில் ஆரி மற்றும் அண்மையில் நடந்து முடிந்த 5வது சீசனில் ராஜூ ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்கியுள்ளது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி நேற்று தொடங்கியுள்ளது.
அதில் பிக்பாஸில் 5 சீசன்களில் கலந்துக்கொண்ட 14 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அதாவது முதல் சீசனில் இருந்து ஜூலி, சினேகன், சுஜா வருணி இரண்டாவது சீசனில் இருந்து தாடி பாலாஜி, ஷாரிக் மூன்றாவது சீசனில் இருந்து வனிதா மற்றும் அபிராமி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் நான்காம் சீசனில் இருந்து அனிதா சம்பத், பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி , ஐந்தாம் சீசனில் இருந்து தாமரை,ஸ்ருதி, அபிநய் மற்றும் நிரூப் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.