குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
வெறித்தனமான ஜூலி ரசிகன்..! சாமி புகைப்படத்துடன் ஜூலியின் புகைப்படத்திற்கு பூஜை போட்ட ரசிகன்.! ஏன் தெரியுமா.?
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவர் ஜூலி. இதன்மூலம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். ஜல்லிக்கட்டு வீராங்கனை என்ற புகழுடன் பிக்பாஸ் வவீட்டிற்குள் சென்ற இவருக்கு தொடக்கத்தில் ரசிகர்கள் ஆதரவு தெர்வித்துவந்தனர்.
அதன்பின் நிகழ்ச்சியில் அவர் சொன்ன பொய்கள், காயத்ரி ரகுராமுடன் சேர்ந்து அவர் நடந்துகொண்ட விதம், ஓவியாவுக்கு எதிராக செய்த சூழ்ச்சிகள் போன்றவற்றால் ரசிகர்கள் அவரை வெறுக்க தொடங்கினர். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் ரசிகர்கள் அவரை கட்டம் கட்டி கலாய்க்க தொடங்கினர்.
ஆனால் இவை எதையும் கண்டுகொள்ளாத ஜூலி, சின்னத்திரை தொகுப்பாளினி, சில திரைப்படங்கள் என நடிக்க தொடங்கினார். இந்நிலையில் சமீபத்தில் ஜூலியின் பிறந்தநாள் வந்ததை ஒட்டி ஜூலியின் ரசிகர் ஒருவர் ஜூலியின் புகைப்படத்தை பிரேம் போட்டு, வீட்டின் பூஜை அறையில் சாமி படங்களுடன் சேர்த்து ஜூலியின் புகைப்படத்திற்கும் பூஜை போட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஜூலிக்கு இவ்வளவு தீவிரமான ரசிகரா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த ரசிகரின் செயல் பலரையும் வியப்படையவைத்துள்ளது.