திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லாஸ்லியா கொடுத்த முதல் பேட்டி! என்ன சொன்னார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்களில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி முதல் இடம் பிடித்தார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இலங்கையை சேர்ந்த லாஷ்லியா மூன்றாவது இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ், பிக்பாஸ் கொண்டாட்டம் முடிந்து தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றுள்ள லாஷ்லியா விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என்னைப்போன்ற சாதாரண பெண்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுத்துள்ளது என்றும், இதற்கு முன் என்னை பெரிதாக யார்க்கும் தெரியாது, ஆனால் தற்போது பெரும் புகழை அடைந்திருக்கிறேன்.
இதனால் பிக்பாஸ் குழுவிற்கு பெரிய நன்றி தெரிவிப்பதாகவும், தனக்கு மிகப்பெரிய கடமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன் நிச்சயம் அதை மனதில் கொண்டு செயல்படுவேன் என கூறியுள்ளார் லாஷ்லியா.