திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கவினை கண்டுக்காமல் போன லாஸ்லியா! என்ன நடக்குது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்கள் இலங்கையை சேர்ந்த லாஷ்லியா மற்றும் நம்ம ஊர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஒருவரை ஒருவர் காதலிப்பதுபோல் காட்டப்பட்டது. இருவரும் காதலிப்பதாகவும், வெளியில் வந்து இருவரும் ஓன்று சேர்ந்துவிடுவார்கள் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடந்த பிக்பாஸ் கொண்டாட்டம், போட்டியாளர்கள் சந்திப்பு இப்படி எங்கு பார்த்தாலும் கவினும், லாஷ்லியாவும் ஒருவருடன் ஒருவர் நல்லமுறையில் பேசிக்கொள்ளக்கூட இல்லை என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாய் பரவியது.
இந்நிலையில் அண்மையில் சென்னையில் நடந்த பிரபல விருது வழங்கும் விழா ஒன்றுக்கு வருகை தந்திருந்த லாஷ்லியா விருது வாங்க செல்லும் போது வரிசையில் இருந்த கவினை கண்டுக்காமல், கவின் பக்கத்தில் இருந்த ஒருவருக்கு கை கொடுத்து சென்றுள்ளார். இந்த செயல் கவின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
ஒரு சிலர் வீடியோவை முழுமையாக காட்டவில்லை, ஒருவேளை எடிட் செய்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.