#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மரண குடிபோதையில் காரில் இருந்து கீழே விழும் பிரபல தமிழ் நடிகர்! வீடியோ!
பிரபல நடிகரும், பிரபல இயக்குனர் பி. வாசுவின் மகனுமான பிக் பாஸ் சக்தி குடித்து விட்டு வாகனம் ஒட்டியதாகவும், மேலும் விபத்து ஏற்படுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் குடித்து விட்டு கீழே விழும் காட்சியும் விடியோவாக வெளியாகியுள்ளது.
நடிகர் சக்தி சின்னத்தம்பி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், சிவலிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்ட இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்நிலையில் நேற்று சென்னை, சூளைமேட்டில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார் சக்தி.
அங்கு நன்கு குடித்துவிட்டு, தனது வீட்டிற்கு காரில் திரும்பியுள்ளார். அப்போது, அந்த தெருவில், ‘சிப்ஸ்’ கடை நடத்தி வரும், செல்வம், 41 என்பவரின் கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு காரை நிறுத்தாமல் சென்ற அவரை அந்த தெருவில் இருந்தவர்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது அங்கு கரை விட்டு இறங்கிய நடிகர் சக்தி போதையில் தடுமாறி கீழே விழும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.
என்னங்கய்யா நீங்க ..... நடிகர்லாம் நாடாளுனும்னு வேஷம் போட்டு அலையிறாங்க...
— சிந்தனைவாதி🇮🇳 (@PARITHITAMIL) January 8, 2019
நீ என்னடான்னா குடிச்சிட்டு கார் ஒட்டிக்கிட்டு அலையுற...? 😁😁😁😁 pic.twitter.com/VW6VSYXLAU