மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. டபுள் எவிக்சனில் வெளியேறிய நிக்சன், ரவீனாவின் சம்பளம் இத்தனை லட்சமா?.. வாரி வழங்கப்பட்ட சம்பளம்.!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 15 நாட்களே போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருப்பார்கள். அதனை தொடர்ந்து வெற்றியாளர் அறிவிக்கப்பட இருக்கிறார்.
தற்போதைய நிலைமையில் பிக்பாஸ் இல்லத்திற்குள் அர்ச்சனா, தினேஷ், மணிச்சந்திரா, மாயா, பூர்ணிமா, விசித்ரா, விஜய், விஷ்ணு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் விஷ்ணு நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
நிக்சன் மற்றும் ரவீனா கடந்த வாரம் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பல சர்ச்சையான விஷயங்களை சந்தித்தவர்கள் டபுள் எவிக்சன் முறையில் வெளியேறிய நிலையில், அவர்களது சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி நிக்சன் ஒரு நாளைக்கு ரூ.12000 சம்பளமாக வாங்கியதாகவும், மொத்தமாக 90 எபிசோடுக்கு ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் 90 நாட்கள் இருந்த ரவீனா ஒரு எபிசோடுக்கு ரூ.18000 சம்பளமாக, 90 நாட்களுக்கு அவர் ரூ.16 லட்சம் கடந்து சம்பளமாக வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.