கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு... கருப்பு நிற சேலையில் அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்...
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படமே அம்மணியை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது எனலாம். அந்த அளவிற்கு இந்த படம் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடனும் ஒருபடம் என தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
இவர் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் துணிச்சல் மிக்கவர். ஃபார்முலா ரேஸ் கார் ரேஸ் பயிற்சி முடித்துள்ளார். தற்போதும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அம்மணி சமீபத்தில் கருப்பு நிற சேலை அணிந்து போட்டோ ஹூட் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.