மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விலையுயர்ந்த சொகுசு காரை விட்டுவிட்டு, ஹாயாக ஆட்டோவில் பயணம் செய்த பிரபல நடிகை! தீயாய் பரவும் புகைப்படம்!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மலைக்கா அரோரா. விளம்பர மாடல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் என சிறந்து விளங்கும் மலைக்கா அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடனமாடும் திறமை கொண்டவர். மேலும் நடனத்தினாலேயே பல படங்களில் மலைக்கா ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
இந்நிலையில் அவர் 1998ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கிய அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2016ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக பிரிந்து வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் 46 வயதாகும் இவர் தன்னைவிட அதிக வயது குறைந்த போனி கபூரின் மகன் அர்ஜுன்கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் புகழின் உச்சியில் இருக்கும் பல பிரபலங்களும் பாதுகாப்புக்கு ஆட்களுடன் சொகுசு காரில் செல்லும் நிலையில், மலைக்கா தன்னுடைய கோடிக்கணக்கான விலை உயர்ந்த காரை விட்டுவிட்டு ஆட்டோ ஒன்றில் பயணம் செய்துள்ளார். உடன் அவரது பெற்றோர்களும் இருந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.