மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன ஓவியா பாதியா வந்துருக்கா.! பூமர் அங்கிளாக கலக்கும் யோகிபாபு! ரசிகர்களை கவர்ந்த ட்ரைலர் இதோ !!
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு மற்றும் நடிகை ஓவியா இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் பூமர் அங்கிள். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதீஸ் எம்எஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தை அங்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.
பூமர் அங்கிள் படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் சுரேஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். முதலில் இந்த படத்திற்கு காண்ட்ராக்டர் நேசமணி என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் பின்னர் பூமர் அங்கிள் என தலைப்பு மாற்றப்பட்டது.
அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் யோகி பாபு காமெடியில் கலக்கியுள்ள படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.