மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் படத்தில் நடிகர் பரத்துக்கு பதில் நடிக்க இருந்தது இந்த நடிகர்தானாம்! ஆனால்?
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். நடிகர் பரத், நடிகை சந்தியா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சிறுவயதில் ஏற்படும் காதல், ஜாதி, வசதி மீறி ஏற்படும் காதல், அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் காதல்.
நடிகர் பரத் படத்தில் பைக் மெக்கானிக்காக வேலை பார்ப்பார். நாயகி சந்தியா மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவியாக நடித்திருப்பார். இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்படும் எதிர்பாராத சந்திப்பு, அந்த சந்திப்பு காதலாக மலர்வது, அதன்பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறுவது என படம் நகரும்.
ஒருகட்டத்தில் இருவரையும் ஏமாற்றி கூட்டிவந்து, இருவரையும் பிரித்து விடுவார்கள். இறுதியில் நடிகர் பரத் பைத்தியமாகி ரோட்டில் சுற்றுவார். படம் பார்த்த அனைவரும் பரத்தின் நடிப்பை பார்த்து கண்கலங்கினார். பரத், சந்தியா இருவரும் படத்தில் பிரமாதமாக நடித்திருப்பார்கள்.
காதல் படத்தில் முதலில் பரத்துக்கு பதில் நடிக்க இருந்தவர் மணிகண்டன்தான். இவர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் ஐந்து நடிகர்களில் ஒருவாறாக நடித்திருப்பார். காதல் படத்தின் இயக்குனர் பரத் கதாபாத்திரத்தில் நடிக்க மணிகண்டனைதான் அழைத்தாராம்.
ஆனால் ஏதோ ஒருசில காரணங்களால் மணிகண்டனால் காதல் படத்தில் நடிக்க முடியாமல் போக, அந்த இடத்தில் நடிகர் பரத் தேர்வாகியுள்ளார். நடிகர் பரத்தின் சினிமா வளர்ச்சிக்கு காதல் படம் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.