தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
குறைந்த விலையில் தரமான மதுபானங்கள் விற்கப்படும் - முன்னாள் முதல்வர் வாக்குறுதி!
18வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதே சமயம் 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் ஆந்திராவில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வரும் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இதனையடுத்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடும் போட்டியின் நிலவி வருகிறது.
எனவே, மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலையொட்டி, மக்களை கவர விதவிதமான வாக்குறுதிகளை இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் மலிவு விலையில் தரமான மதுபானங்கள் தருவோம் என்ற வாக்குறுதி அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவதாக கூறி ஆட்சியைப் பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி, ஆட்சியில் அமர்ந்ததும் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டார். உழைக்கும் மக்கள் குடிக்கும் மதுபானங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
மதுவின் விலையை உயர்த்தி இருந்தாலும், தரத்தை உயர்த்தி இருக்கலாம். ஆனால் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் தரமற்ற மதுவை விநியோகித்து நமது மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறார்கள். எனவே தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான மதுவை குறைந்த விலையில் கொடுப்போம் என உறுதி அளித்துள்ளார்.