திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் நினைவாக... ஆந்திர அரசுக்கு, சந்திரபாபு நாயுடு விடுத்த வேண்டுகோள்!
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
அவரது உடல் அரச மரியாதையுடன் குண்டுகள் முழங்க, சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, எஸ்பிபி பெயரில் ஒரு இசைப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், எஸ்பிபியின் சொந்த ஊரான நெல்லூரில் அவரது நினைவாக இசை பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும். அங்கு அவரது வெண்கலச்சிலை ஒன்றை நிறுவ வேண்டும்
மேலும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும், அவரது பெயரில் தேசிய விருது ஒன்றை நிறுவ வேண்டும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்துவது, மாநிலத்தின் கலை தரத்தை உயர்த்துவது போன்றவையே எஸ்பிபி அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி எனவும் குறிப்பிட்டுள்ளார்.