மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களுக்கு உதவுவதாக விஜயின் பெயரை கூறி ஆட்பறித்த ரசிகர்கள்: கண்டித்த விஜய்.!
சென்னையை திணறவிட்ட பேய்மழை, புயல் வெள்ளம் ஓய்ந்துள்ளது. மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டு இருந்த பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு, அரசு, தொண்டு நிறுவனம், அரசியல் கட்சிகள் சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
நடிகர் விஜயும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மீட்பு பணிகள் செய்ய களமிறக்கி, அவர்களை போனில் தொடர்புகொண்டு கவனமாக நலத்திட்ட உதவி பணிகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.
அப்படியாக நலத்திட்ட பணிகளில் ஈடுபட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜயின் புகைப்படத்தை கையில் ஏந்தியவரும், அவர் பெயரை கோஷமிட்டவாறும் சிலர் நலத்திட்டங்களை வழங்கினர்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை சந்திக்க, விவகாரம் விஜய் வரை சென்றுள்ளது. அவர் தனது நிர்வாகிகளை உதவிகளை செய்யத்தானே கூறினேன். எதற்காக பெருமைக்கு செய்கிறீர்கள்? என கண்டித்துக்கொண்டதாக தெரியவருகிறது.
இதனையடுத்து, அவ்வாறான சர்ச்சை செயலில் ஈடுபட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அமைதியாக தங்களின் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.